Ads1

    Windows XP இல் தேவையில்லாத இணையதளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க

 Translate to Other Language Pls Choose Translator --------->

பறந்து விரிந்து உள்ள இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு கெட்ட விஷயங்களும் உள்ளது. பேஸ்புக், யுடியூப் போன்றசமூக தளங்களில் நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.
இப்படி பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த தளங்களால் பாதிக்க படுகின்றனர்.  இது போன்ற பிரச்சினையை தடுக்க நாம் அந்த தளங்களை நம் கணினியில் ஓபன் ஆகாதவாறு தடுத்து நிறுத்த முடியும். இந்த முறையில் தளங்களை முடக்கினால் எந்த  தளத்தை திறக்க நினைத்தாலும் முடியாது.
  • முதலில் உங்கள் கணினியில் கீழே உள்ள பகுதிக்கு செல்லுங்கள்.C:\WINDOWS\system32\drivers\etc இந்த பகுதிக்கு செல்லுங்கள்.
  • அங்கு உள்ள hosts என்ற பைலை நோட்பேடில் திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.

  • படத்தில் காட்டி இருக்கும் கோடிங்கை காப்பி செய்து அதற்கு கீழேயே பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  • அடுத்து நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கில் உள்ள Localhost என்பதை மட்டும் அழித்து நீங்கள் தடை செய்ய நினைக்கும் தளத்தின் பெயரை கொடுத்து விடவும். உதவிக்கு கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

  • இது போல் செய்து முடித்ததும் நீங்கள் செய்த வேலையை File- Save சென்று சேமித்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் திறந்த அனைத்து விண்டோவினையும் மூடிவிட்டு உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்யுங்கள்.
  • உங்கள் கணினியை Restart செய்து திறந்தவுடன் இப்பொழுது  நீங்கள் தடை செய்த தளங்களை ஓபன் செய்து பாருங்கள். கீழே உள்ள பிழை செய்திகளே வரும்.


  • அவ்வளவு தான் இந்த முறையில் நீங்கள் எத்தனை தளங்களை வேண்டுமென்றாலும் உங்கள் விருப்பம் போல் சேமித்து கொள்ளுங்கள்.
  • இந்த தளங்கள் மறுபடியும் திறக்க வேண்டுமென்றால் மேற்கூறிய அதே இடத்தில் சென்று திறக்கவேண்டிய தளத்தை மட்டும் அழித்து சேமித்து விட்டு உங்கள் கணினியை Restart செய்து பின்பு திறந்தால் அந்த தளத்தை திறந்து கொள்ளலாம்.


Share Our Friends


0 comments:

Post a Comment

Recent Posts

Ads