இந்த கொசுக்களை விரட்ட நாம் தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். பலர் டென்னிஸ் மட்டைப்போல் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு கொசுக்களை அடிப்பதை பார்த்திருப்போம். நாம் கணினியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த மென்பொருள் உதவுகிறது.இதை பதிவிறக்கி ஓபன் செய்தவுடன் நேரடியாக அல்ட்ரா ஒலிகளை வெளிப்படுத்த ஆரம்பித்துவிடும். இந்த ஒலிகள் மனித காதுகளுக்கு கேட்காது.
இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும்.இது போன்ற மென்பொருள் இணையத்தில் பல இருந்தாலும் உடனே பயனளிக்க கூடிய மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.
இதில் எந்த நச்சுநிரலும் கிடையாது.மற்றும் மிக சிறியதும் கூட..
Share Your Friends
0 comments:
Post a Comment